திங்கள், 24 டிசம்பர், 2012



காதல் 

நீ இருந்த இடத்தில்
 நீ மட்டும் தான் 
இன்று  வரையில் 
ஆனால்
நான் இருந்த இடத்தில் 
மட்டும் வேறுருத்தி 

திங்கள், 17 டிசம்பர், 2012


திருடப் பட்ட கடல் பட பாடல்கள் 


பரவலாக எதிர்பார்க்கப் பட்ட கடல்  படத்தின் பாடல்கள் ஒரு வழியாக டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. இன்னிலையில்   டிசம்பர் 15 ஆம் தேதியே  அவசரமாக  வெளியிடப்பட்டது .
இதற்க்கு பல கரணங்கள் உலவ விடப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவென்றால் 14 ஆம் தேதியே கடல் படத்தின் பாடல்கள் திருடப்பட்டு வலைதளங்களில் வெளியாகிவிட்டது . அதை பரவலாக  மக்கள் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விட்டனர் . இதை அறிந்த மெட்ராஸ் டாக்கீஸ் வேறு வழியின்றி மறுநாளே பாடல்களை அதிகரப்பூர்வமாக வெளியிட்டது . இப்போது பாடல்கள் நல்ல முறையில் விற்று வந்தாலும் பாடல்கள் திருட்டு போனது மெட்ராஸ் டாக்கிசை  உலுக்கியது என்னவோ உண்மைதான் .

செவ்வாய், 4 டிசம்பர், 2012

 சென்னை வீதிகளில்  
அவனது ஊர் உறவினர் காசி சென்னையில் ஷேர் ஆட்டோ ஒட்டிகொண்டிருந்தார் .சென்னை வரும்போதெல்லாம் அவரது ரூமில் தான் தங்குவான் . இந்த முறையும் அங்கேதான் தங்கியிருந்தான் .தற்போது காசிக்கு திருமணம் ஆகியிருந்தது .அதனால் அவர் தனியாக வீடு பார்த்து தன்  மனைவியோடு  தங்கியிருந்தார் .
 அவனது (அமுதன் -நம்ம கதாநாயகன்) அறையில் காசியின் அக்கா  மகன் அரசும்  தங்கியிருந்தான் .இவர்கள் கூட ஒரு தற்காலிக  விருந்தாளியும்(அசோக் ) தங்கியிருந்தார் . அரசும், அசோக்கும்  ஏற்க்கனவே  நன்றாகவே பழகியிருந்தனர் இதில் மூவருக்குள்ளும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தது அரசு படிப்பில் ஈடுபாடில்லாதவன் அதனால் அவனுக்கு உலக அறிவு கொஞ்சம் குறைவு .அசோக்  பட்டங்கள் பெற்றவர் , அனைத்தைப் பற்றியும் அவர் வாதிடுவர் . இருவருக்குள்ளும் அடிக்கடி வாதங்கள் முற்றிபோகும் இதையெல்லாம் சத்தமில்லாமல் கவனிப்பது அமுதனின் குணம் .  காசியும் , அரசும்  எதிரிகள் போலவே நடந்து கொள்வார்கள் .காசி சென்னையில் பத்துவருடங்களாக கஷ்டப் பட்டு தற்போது சொந்தமாக இரண்டு ஆட்டோக்களை வாங்கியுள்ளார் . அவருக்கு அதுமிகப்பெரிய சாதனை .அதிலொரு ஆட்டோவைத் தான் அரசு ஓட்டிகொண்டிருக்கிறான் . தினமும் வண்டியின் முதலாளிக்கு அதாவது காசிக்கு  400 ரூபாய் வாடகை தரவேண்டும். அதைக் கறாராக  வசூலித்து விடுவர் காசி .அரசு காலையிலேயே  எழுந்து   சவாரிக்கு போகவேண்டும் .இரவில் சீக்கிரம் ரூமுக்கு வந்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுவார்  . ஆனால் அரசு  இரவில் லேட்டாகத்  தான்  வருவான் . அதனால் கலையில் லேட்டாகத்  தான்  எழுந்திருப்பான் இது போன்ற சிறு சிறு காரணங்களுக்காக இருவருக்குள்ளும் அதிக வாக்குவாதங்கள்  ஏற்படும்  போதெல்லாம் இடையில் அமுதன்  மட்டிக்கொண்டு  வேறுவழியில்லாமல்  அசட்டு சிரிப்போடு இருவருக்கும் ஜால்ரா போடுவான்.

அன்று திங்கட்கிழமை அமுதன் மூன்று பிலான்ங்கள் வைத்திருந்தான்
வேளச்சேரியில் ஒரு டீ.வி  ஷோ ரூமில் வேலைக்கு ஆட்கள் தேவை  என்ற தினத்தந்தி விளம்பரத்தின்  உதவியோடு அங்கு சென்று வேலை கேட்பது என்றும் அதே தினத்தந்தி விளம்பரத்தின் உதவியோடு  பேனர்  பிரிண்டிங்  கம்பெனிக்கு வேலை கேட்டு செல்வது  இதில்  இரண்டும் நடக்க வில்லை என்றால் உதயம் த்யேட்டரில் எதாவது மொக்கையான படம் பார்ப்பது . இவைதான் அவனின் முப்பெரும் திட்டங்கள் (அமுதன் வேலை தேடி செல்லும் இடங்களில் எதாவது ஏமாற்றம் ஏற்ப்பட்டால் எதாவது நன்றாய் இல்லாத படம் பார்ப்பது வழக்கம் ஏனெனில் படம் முடிந்தவுடம் இவர்களெல்லாம் படம் எடுக்கும் போது நான் எடுக்க முடியாதா!! என்று அவனுக்குள்ளே நம்பிக்கை ஏற்ப்படுதிகொள்வான் .அவன்கிளம்பி விட்டான்  வேலை தேடி  இன்று என்னென ஏமாற்றங்கள் அவனுக்கு கத்திருக்கோ என்ற எண்ணத்தோடு ..............


தொடரும்.........................



மணிரத்னம் இயக்கத்தில்  ஏ .ஆர் ரஹ்மான் இசையில் கடல் படத்தின் "நெஞ்சுக்குள்ளே " என்ற  முன்னோட்ட பாடல் சமிபத்தில் வெளியாகி  அமோக வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மொத்த பாடல்களும் டிசம்பர்  17 ஆம் தேதி வெளியாகிறது. மணிரத்தினம்- ஏ .ஆர் .ஆர் கூட்டணியில் வெளியாகும் பாடல்களுக்கு எப்போதுமே மிகுந்த வரவேற்ப்பு இருக்கும் நிலையில் கடல் படத்தின் பாடல்களும் மிகுந்த எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

"ஏ.ஆர் .ரஹ்மான்  ரசிகர்கள் காட்டில் இந்த வருடம் செம்ம மழை "

செவ்வாய், 30 அக்டோபர், 2012

சென்னை வீதிகளில்


சென்னை வந்தவன் அந்நாளிலேயே  தனது பழைய வேலையின் முதலாளியை போய் சந்தித்தான் . ஆரம்பத்தில்  நன்றாய் பேசிய அவர் உன்னை வேலைக்கு வைத்தால் நீ மறுபடியும்  பாதியிலேயே போகமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்பது போல்  பேசி அவனை நான்கு நாள் கழித்து வரச்சொல்லி அனுப்பி விட்டார் . ஏமாற்றத்துடன் திரும்பி வந்தவன்  அடுத்து என்ன செய்யப் போகிறோம்  என்ற குழப்பத்தில்  ஆழ்ந்தான்  .மறுநாள் ஞாயிற்றுகிழமை  தினத்தந்தி நாளேடு அவன் ரூம் வாசலில் வந்து விழுந்தது . அதில் நான்கு பக்கங்களுக்கு வரி விளம்பரங்கள் வந்திருந்தது ,அதிலுள்ள வேலை வாய்ப்பு செய்திகளின் படி சில நிறுவனகளுக்கு போனில் தொடர்பு கொண்டான் .அதில் சிலர் மறுநாளே அவனை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர் . ஒவ்வொவ்வொன்றாக  சத்தித்த அவனுக்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றம் . இதனிடையில் எதாவது ஒரு  இயக்குனரிடம் தனது பயோ டே டா  கொடுத்து வரலாம் என்று நினைத்தவன் இயக்குனர் பாலாவின் முகவரியை இணையதளத்தில் தேடி நான்கு மணி நேர  தேடுதலுக்கு  பின் பாலாவின்  அலுவலகத்தை சென்றடைந்தான் . தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் ,முகப்பறையில் நான்கைந்து பேர் எதோ விவாதித்துக்கொண்டிருந்தனர் . அதிலொருவர் இவனை பார்த்து காத்திருங்கள் உள்ளிருந்து ஆள் வருவார்கள் என்பது போல் கண்ணசைத்தார் . சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின் உள்ளிருந்து ஒருவர் வந்தார் .வணக்கம் தெரிவித்தான் .நல்ல வேலையாக பதில் வணக்கம் வந்தது . என்ன விடயம் என்று கேட்டவர்க்கு சாரிடம் உதவியாளனாக வேண்டும் என்று பதிலளித்தான் .இவனிடம் பயோ டே டா வாங்கி வைத்துக்கொண்டார் .சாரோட பரதேசி படம் ரிலிஸ்  ஆன பிறகு கால் பண்ணுவோம் அப்ப வந்து நேர் முகத்தேர்வில் கலந்து கொள்ளுங்கள்  என்று கனிவாய் பேசி அனுப்பி வைத்தனர் .நன்றி சொல்லி விட்டு  திரும்பியவன் கண்ணில் பட்டது அந்த அலுவலகத்தின் மரத்தடியில் கட்டிப் போடப்பட்ட நாய் .அவ்வளவு சாந்தமாக  படுத்திருந்தது .அந்த நாயின் மீது சிறு பொறாமையும் வந்ததது .பாலாவின் அலுவலகத்தில் அதற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறதே  என்று .

தொடரும் ....................


Jab Tak Hai Jaan

ஏ.ஆர் .ரஹ்மானின் புதிய இந்தி ஆல்பம் வெளியாகி உள்ளது .அனேகமாக இந்த ஆண்டின் ஹிட் பாடல்கள்  வரிசையில் இதில் உள்ள பாடல்களும் இடம் பிடிக்கும்  என்பதில் சந்தேகமில்லை 

அப்பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரி இதோ  கேட்டு மகிழுங்கள் 

சென்னை வீதிகளில்

சென்னை வீதிகளில்



                  பைத்தியம் பிடித்தவன் போல்  சென்னை வீதிகளில் அலைகிறான் .அவனுக்கு சாதரணமான ஒரு லட்சியம் தான் - திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பதே அது .அதற்காகவே தன் கல்லூரிப் படிப்பிலும் காட்சி தொடர்பியல் எடுத்து படித்தான். வீட்டிலிருந்த படியே  யார்யாரிடமோ தொடர்பு கொண்டு சென்னையில்  கேமரா உதவியாளனாக வேலையில் சேர்ந்தான்.ஆர்வமாக வேலை செய்து கொண்டு இருந்தவனுக்கு மேலும் ஒரு பேராசை சென்னையில் திரைப் பட கல்லூரியில் படிக்க முடிவு செய்தான்.கிடைத்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு  வந்து சேர்ந்தான். மூன்று மதங்கள் விழுந்து விழுந்து நுழைவுதேர்வுக்காக படித்தான் .சினிமாவின் அத்தனை தகவல்களையும் தேடித் தேடி  படித்தான் .நுழைவுதேர்வு நெருங்கியது-வழக்கம் போல்  அம்மாவிடம் இரண்டாயிரத்தை வங்கிக் கொண்டு சென்னை வந்தான் .  நுழைவுதேர்வு கேள்வித்தாளில் இவன் படித்தது எதுவும் வரவில்லை என்றாலும்
மிகவும் எளிமையாகவே கேள்விகள்  இருந்தது.சந்தோசமாக  நேர்முகத்தேர்வின் அறைக்குள்ளே   நுழைந்தான் அங்கு அவனுக்கு கேட்கப்பட்டது ஒரே கேள்விதான் ஆனால் அது கேட்கப் பட்ட விதம் அவனை குழப்பியது -நீங்கள் குறும்படம் எடுக்க பயன்படுத்திய கேமராவில் என்னென்ன இருந்தது ?- எளிமையான கேள்விதான் என்றாலும் பட படப்பு நிறைந்த அந்த நேரத்தில்  ஏதேதோ உளறிவிட்டு வெளியேறினான்.அந்த வாய்ப்பும் கைநழுவியது.ஏமாற்றத்துடன் மீண்டும் ஊரை நோக்கி பயணித்தான்.ஆறு மதங்கள் விரைவாக கடந்தது .வீட்டில் கடன் தொல்லை அதிகரித்தது -எல்லாம் இவன் படிப்பிற்காக வாங்கிய கடன்கள் தான் -அம்மா அவன் மூத்த  சகோதரனுக்கு போன் செய்து கடன் தொல்லையை புலம்ப அவன் தான் முதலாளியிடம் அம்மாவிற்கு விபத்து ஏற்பட்டதாய் பொய்த்து பத்தாயிரம் கரந்து  வீட்டிற்கு அனுப்பி வைத்தான் .அந்த  பணத்தில் ஒரு மூவாயிரத்தை வாங்கிக்கொண்டு மறுபடியும் சென்னை விரைந்தான் இவன் 

----தொடரும் ----               

திங்கள், 8 அக்டோபர், 2012

முதியோர் இல்லம்

தான்
தள்ளப்பட்டபோது தான்
புரிந்தது
என் தாய் தந்தையரின்
வேதனை 

புதன், 19 செப்டம்பர், 2012

poems

பிஞ்சுகள்

குறுவட்டில்  உலகம்
அடங்கிய போதும்
முதுகை விட
மறுக்கிறது
புத்தகமூட்டை