செவ்வாய், 30 அக்டோபர், 2012
சென்னை வீதிகளில்
சென்னை வந்தவன் அந்நாளிலேயே தனது பழைய வேலையின் முதலாளியை போய் சந்தித்தான் . ஆரம்பத்தில் நன்றாய் பேசிய அவர் உன்னை வேலைக்கு வைத்தால் நீ மறுபடியும் பாதியிலேயே போகமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்பது போல் பேசி அவனை நான்கு நாள் கழித்து வரச்சொல்லி அனுப்பி விட்டார் . ஏமாற்றத்துடன் திரும்பி வந்தவன் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் .மறுநாள் ஞாயிற்றுகிழமை தினத்தந்தி நாளேடு அவன் ரூம் வாசலில் வந்து விழுந்தது . அதில் நான்கு பக்கங்களுக்கு வரி விளம்பரங்கள் வந்திருந்தது ,அதிலுள்ள வேலை வாய்ப்பு செய்திகளின் படி சில நிறுவனகளுக்கு போனில் தொடர்பு கொண்டான் .அதில் சிலர் மறுநாளே அவனை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர் . ஒவ்வொவ்வொன்றாக சத்தித்த அவனுக்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றம் . இதனிடையில் எதாவது ஒரு இயக்குனரிடம் தனது பயோ டே டா கொடுத்து வரலாம் என்று நினைத்தவன் இயக்குனர் பாலாவின் முகவரியை இணையதளத்தில் தேடி நான்கு மணி நேர தேடுதலுக்கு பின் பாலாவின் அலுவலகத்தை சென்றடைந்தான் . தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் ,முகப்பறையில் நான்கைந்து பேர் எதோ விவாதித்துக்கொண்டிருந்தனர் . அதிலொருவர் இவனை பார்த்து காத்திருங்கள் உள்ளிருந்து ஆள் வருவார்கள் என்பது போல் கண்ணசைத்தார் . சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின் உள்ளிருந்து ஒருவர் வந்தார் .வணக்கம் தெரிவித்தான் .நல்ல வேலையாக பதில் வணக்கம் வந்தது . என்ன விடயம் என்று கேட்டவர்க்கு சாரிடம் உதவியாளனாக வேண்டும் என்று பதிலளித்தான் .இவனிடம் பயோ டே டா வாங்கி வைத்துக்கொண்டார் .சாரோட பரதேசி படம் ரிலிஸ் ஆன பிறகு கால் பண்ணுவோம் அப்ப வந்து நேர் முகத்தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என்று கனிவாய் பேசி அனுப்பி வைத்தனர் .நன்றி சொல்லி விட்டு திரும்பியவன் கண்ணில் பட்டது அந்த அலுவலகத்தின் மரத்தடியில் கட்டிப் போடப்பட்ட நாய் .அவ்வளவு சாந்தமாக படுத்திருந்தது .அந்த நாயின் மீது சிறு பொறாமையும் வந்ததது .பாலாவின் அலுவலகத்தில் அதற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறதே என்று .
தொடரும் ....................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக