செவ்வாய், 30 அக்டோபர், 2012

சென்னை வீதிகளில்

சென்னை வீதிகளில்



                  பைத்தியம் பிடித்தவன் போல்  சென்னை வீதிகளில் அலைகிறான் .அவனுக்கு சாதரணமான ஒரு லட்சியம் தான் - திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பதே அது .அதற்காகவே தன் கல்லூரிப் படிப்பிலும் காட்சி தொடர்பியல் எடுத்து படித்தான். வீட்டிலிருந்த படியே  யார்யாரிடமோ தொடர்பு கொண்டு சென்னையில்  கேமரா உதவியாளனாக வேலையில் சேர்ந்தான்.ஆர்வமாக வேலை செய்து கொண்டு இருந்தவனுக்கு மேலும் ஒரு பேராசை சென்னையில் திரைப் பட கல்லூரியில் படிக்க முடிவு செய்தான்.கிடைத்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு  வந்து சேர்ந்தான். மூன்று மதங்கள் விழுந்து விழுந்து நுழைவுதேர்வுக்காக படித்தான் .சினிமாவின் அத்தனை தகவல்களையும் தேடித் தேடி  படித்தான் .நுழைவுதேர்வு நெருங்கியது-வழக்கம் போல்  அம்மாவிடம் இரண்டாயிரத்தை வங்கிக் கொண்டு சென்னை வந்தான் .  நுழைவுதேர்வு கேள்வித்தாளில் இவன் படித்தது எதுவும் வரவில்லை என்றாலும்
மிகவும் எளிமையாகவே கேள்விகள்  இருந்தது.சந்தோசமாக  நேர்முகத்தேர்வின் அறைக்குள்ளே   நுழைந்தான் அங்கு அவனுக்கு கேட்கப்பட்டது ஒரே கேள்விதான் ஆனால் அது கேட்கப் பட்ட விதம் அவனை குழப்பியது -நீங்கள் குறும்படம் எடுக்க பயன்படுத்திய கேமராவில் என்னென்ன இருந்தது ?- எளிமையான கேள்விதான் என்றாலும் பட படப்பு நிறைந்த அந்த நேரத்தில்  ஏதேதோ உளறிவிட்டு வெளியேறினான்.அந்த வாய்ப்பும் கைநழுவியது.ஏமாற்றத்துடன் மீண்டும் ஊரை நோக்கி பயணித்தான்.ஆறு மதங்கள் விரைவாக கடந்தது .வீட்டில் கடன் தொல்லை அதிகரித்தது -எல்லாம் இவன் படிப்பிற்காக வாங்கிய கடன்கள் தான் -அம்மா அவன் மூத்த  சகோதரனுக்கு போன் செய்து கடன் தொல்லையை புலம்ப அவன் தான் முதலாளியிடம் அம்மாவிற்கு விபத்து ஏற்பட்டதாய் பொய்த்து பத்தாயிரம் கரந்து  வீட்டிற்கு அனுப்பி வைத்தான் .அந்த  பணத்தில் ஒரு மூவாயிரத்தை வாங்கிக்கொண்டு மறுபடியும் சென்னை விரைந்தான் இவன் 

----தொடரும் ----               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக