செவ்வாய், 30 அக்டோபர், 2012

சென்னை வீதிகளில்


சென்னை வந்தவன் அந்நாளிலேயே  தனது பழைய வேலையின் முதலாளியை போய் சந்தித்தான் . ஆரம்பத்தில்  நன்றாய் பேசிய அவர் உன்னை வேலைக்கு வைத்தால் நீ மறுபடியும்  பாதியிலேயே போகமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்பது போல்  பேசி அவனை நான்கு நாள் கழித்து வரச்சொல்லி அனுப்பி விட்டார் . ஏமாற்றத்துடன் திரும்பி வந்தவன்  அடுத்து என்ன செய்யப் போகிறோம்  என்ற குழப்பத்தில்  ஆழ்ந்தான்  .மறுநாள் ஞாயிற்றுகிழமை  தினத்தந்தி நாளேடு அவன் ரூம் வாசலில் வந்து விழுந்தது . அதில் நான்கு பக்கங்களுக்கு வரி விளம்பரங்கள் வந்திருந்தது ,அதிலுள்ள வேலை வாய்ப்பு செய்திகளின் படி சில நிறுவனகளுக்கு போனில் தொடர்பு கொண்டான் .அதில் சிலர் மறுநாளே அவனை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர் . ஒவ்வொவ்வொன்றாக  சத்தித்த அவனுக்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றம் . இதனிடையில் எதாவது ஒரு  இயக்குனரிடம் தனது பயோ டே டா  கொடுத்து வரலாம் என்று நினைத்தவன் இயக்குனர் பாலாவின் முகவரியை இணையதளத்தில் தேடி நான்கு மணி நேர  தேடுதலுக்கு  பின் பாலாவின்  அலுவலகத்தை சென்றடைந்தான் . தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் ,முகப்பறையில் நான்கைந்து பேர் எதோ விவாதித்துக்கொண்டிருந்தனர் . அதிலொருவர் இவனை பார்த்து காத்திருங்கள் உள்ளிருந்து ஆள் வருவார்கள் என்பது போல் கண்ணசைத்தார் . சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின் உள்ளிருந்து ஒருவர் வந்தார் .வணக்கம் தெரிவித்தான் .நல்ல வேலையாக பதில் வணக்கம் வந்தது . என்ன விடயம் என்று கேட்டவர்க்கு சாரிடம் உதவியாளனாக வேண்டும் என்று பதிலளித்தான் .இவனிடம் பயோ டே டா வாங்கி வைத்துக்கொண்டார் .சாரோட பரதேசி படம் ரிலிஸ்  ஆன பிறகு கால் பண்ணுவோம் அப்ப வந்து நேர் முகத்தேர்வில் கலந்து கொள்ளுங்கள்  என்று கனிவாய் பேசி அனுப்பி வைத்தனர் .நன்றி சொல்லி விட்டு  திரும்பியவன் கண்ணில் பட்டது அந்த அலுவலகத்தின் மரத்தடியில் கட்டிப் போடப்பட்ட நாய் .அவ்வளவு சாந்தமாக  படுத்திருந்தது .அந்த நாயின் மீது சிறு பொறாமையும் வந்ததது .பாலாவின் அலுவலகத்தில் அதற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறதே  என்று .

தொடரும் ....................


Jab Tak Hai Jaan

ஏ.ஆர் .ரஹ்மானின் புதிய இந்தி ஆல்பம் வெளியாகி உள்ளது .அனேகமாக இந்த ஆண்டின் ஹிட் பாடல்கள்  வரிசையில் இதில் உள்ள பாடல்களும் இடம் பிடிக்கும்  என்பதில் சந்தேகமில்லை 

அப்பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரி இதோ  கேட்டு மகிழுங்கள் 

சென்னை வீதிகளில்

சென்னை வீதிகளில்



                  பைத்தியம் பிடித்தவன் போல்  சென்னை வீதிகளில் அலைகிறான் .அவனுக்கு சாதரணமான ஒரு லட்சியம் தான் - திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பதே அது .அதற்காகவே தன் கல்லூரிப் படிப்பிலும் காட்சி தொடர்பியல் எடுத்து படித்தான். வீட்டிலிருந்த படியே  யார்யாரிடமோ தொடர்பு கொண்டு சென்னையில்  கேமரா உதவியாளனாக வேலையில் சேர்ந்தான்.ஆர்வமாக வேலை செய்து கொண்டு இருந்தவனுக்கு மேலும் ஒரு பேராசை சென்னையில் திரைப் பட கல்லூரியில் படிக்க முடிவு செய்தான்.கிடைத்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு  வந்து சேர்ந்தான். மூன்று மதங்கள் விழுந்து விழுந்து நுழைவுதேர்வுக்காக படித்தான் .சினிமாவின் அத்தனை தகவல்களையும் தேடித் தேடி  படித்தான் .நுழைவுதேர்வு நெருங்கியது-வழக்கம் போல்  அம்மாவிடம் இரண்டாயிரத்தை வங்கிக் கொண்டு சென்னை வந்தான் .  நுழைவுதேர்வு கேள்வித்தாளில் இவன் படித்தது எதுவும் வரவில்லை என்றாலும்
மிகவும் எளிமையாகவே கேள்விகள்  இருந்தது.சந்தோசமாக  நேர்முகத்தேர்வின் அறைக்குள்ளே   நுழைந்தான் அங்கு அவனுக்கு கேட்கப்பட்டது ஒரே கேள்விதான் ஆனால் அது கேட்கப் பட்ட விதம் அவனை குழப்பியது -நீங்கள் குறும்படம் எடுக்க பயன்படுத்திய கேமராவில் என்னென்ன இருந்தது ?- எளிமையான கேள்விதான் என்றாலும் பட படப்பு நிறைந்த அந்த நேரத்தில்  ஏதேதோ உளறிவிட்டு வெளியேறினான்.அந்த வாய்ப்பும் கைநழுவியது.ஏமாற்றத்துடன் மீண்டும் ஊரை நோக்கி பயணித்தான்.ஆறு மதங்கள் விரைவாக கடந்தது .வீட்டில் கடன் தொல்லை அதிகரித்தது -எல்லாம் இவன் படிப்பிற்காக வாங்கிய கடன்கள் தான் -அம்மா அவன் மூத்த  சகோதரனுக்கு போன் செய்து கடன் தொல்லையை புலம்ப அவன் தான் முதலாளியிடம் அம்மாவிற்கு விபத்து ஏற்பட்டதாய் பொய்த்து பத்தாயிரம் கரந்து  வீட்டிற்கு அனுப்பி வைத்தான் .அந்த  பணத்தில் ஒரு மூவாயிரத்தை வாங்கிக்கொண்டு மறுபடியும் சென்னை விரைந்தான் இவன் 

----தொடரும் ----               

திங்கள், 8 அக்டோபர், 2012

முதியோர் இல்லம்

தான்
தள்ளப்பட்டபோது தான்
புரிந்தது
என் தாய் தந்தையரின்
வேதனை